சுடச்சுட

    

    எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி!

    By DIN  |   Published on : 01st March 2017 02:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    isro

    பாலசோர்:  எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அதிநவீன இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    உலக நாடுகள் தங்கள் பாதுகாப்பின் நலம் கருதி பல்லிஸ்டிக் மிசைல் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை) மற்றும் ஆன்ட்டி பல்லிஸ்டிக் மிசைல் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்க வரும் ஏவுகணையை அழிக்கும் ஏவுகணை) ஆகியவைகளின் வளர்ச்சியில் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டே போக, இந்தியாவும் ராணுவ வலிமையை பன்மடங்கு பெருக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு முழு நீள மற்றும் பல அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வேண்டும் என்ற முயற்சியில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் பல்வேறு ஆயுதங்களை தயாரித்து, சோதனை நடத்தி வெற்றி கண்டு வருகிறது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் தாக்கும் திறனுள்ள சூப்பர்சோனிக் இன்டர்செப்டார் ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளன.

    இதில், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். இந்த சோதனை வெற்றிபெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சூப்பர்சோனிக் இன்டர்செப்டார் ரக ஏவுகணையின் சிறப்பு:
    - வெற்றிகரமாக பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கம் பெற்ற சூப்பர்சோனிக் ஏவுகணையாகும்.
    - பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணையானது வங்காள விரிகுடாவில் நங்கூரமிடப்பட்டு இருக்கும் இந்திய கடற்படையின் ஒரு கப்பலில் இருந்து ஏவப்பட்ட ப்ரிதீவ் ஏவுகணையின் ஒரு பதிப்புக்கு எதிராக ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
    - இந்தியாவின் உள்வரும் எந்த விதமான எதிரி நாடுகளின் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் அழிக்கும் திறன் கொண்டது.
    - உள்வரும் இலக்கு ஏவுகணையானது 11.15 மணிக்கு ஏவப்பட்டது, அதை ரேடார் மூலம் கண்டறிந்து கண்காணித்து அப்துல் கலாம் தீவில் இருந்து கிளம்பிய இடைமறிப்பு ஏவுகணை நடு வானில், எண்டோ- வளிமண்டல உயரத்தில் தாக்கி அழித்தது.
    - இந்த இடைமறிப்பு ஏவுகணையின் கில் எப்பெக்ட் ஆனது பல கண்காணிப்பு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவு மூல பகுப்பாய்வு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    - இந்த இடைமறிப்பு ஏவுகணை - 7.5 மீட்டர் நீளமுள்ள ஒற்றை நிலை திட ராக்கெட் மூலம் வழிநடத்தப்படும் ஒரு ஊடுருவல் முறை பொருத்தப்பட்ட ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
    - இது ஒரு ஹை-டெக் கணினி மற்றும் மின்னியக்க ஏவி மூலம் இயக்கப்பட்டது.
    - இந்த ஏவுகணையில் சொந்தமான மொபைல் லான்சர், சுயாதீன மற்றும் இயற்கைத் தன்மை கொண்ட கண்காணிப்பு திறன், அதிநவீன ரேடார்கள் மற்றும் பாதுகாப்பான தரவு இணைப்பு போன்றவைகளும் அடக்கம்.

    சமீபத்தில் இஸ்ரோ நிறுவனம் 104 செயற்கை கோள்களை தங்கிச் செல்லும் ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai