சுடச்சுட

    

    எய்ம்ஸ் மாணவர் சரவணன் உயிரிழந்த சம்பவம்: கனிமொழிக்கு உள்துறை அமைச்சகம் பதில்

    By DIN  |   Published on : 01st March 2017 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி எழுதியிருந்த கடிதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
    தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் மருத்துவப் பட்டப் படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதியிருந்தார்.
    அதில், ’குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியான சரவணனுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளதாகவும், அவரே அந்த ஊசியை போட்டுக் கொள்ள வாய்ப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
    இந்நிலையில், கனிமொழியின் கடிதத்துக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் கங்காராம் அஹிர் எழுத்துப்பூர்வமாக பதில் எழுதியுள்ளார். அதில், ’சரவணனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அவரது பெற்றோரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் உள்ளுறுப்புகள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். சரவணனின் மரணத்தை கொலை வழக்காகவும் தில்லி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். மேலும், சரவணனின் பெற்றோரும் இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai