சுடச்சுட

  
  march

  தில்லியில் ஏபிவிபி இயக்கத்தைக் கண்டித்து பேரணி நடத்திய கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள்.

  பாஜக ஆதரவு ஏபிவிபி இயக்கத்துக்கு எதிராக தில்லியில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் சில பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
  பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகப் பேசிய ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித், தில்லி ராம்ஜஸ் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி மாணவர்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.
  அப்போது, ஏபிவிபி மாணவர்களுக்கும், இடதுசாரி ஆதரவு அமைப்பான ஏஐஎஸ்ஏ மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கருத்துச் சுதந்திரத்தை ஏபிவிபி இயக்கத்தினர் நசுக்குவதாகக் கூறி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
  கண்டனப் பேரணி: இந்நிலையில், ஏபிவிபி மாணவர்களைக் கண்டித்து தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணி நடத்தினர். ஜேஎன்யு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும், பேராசிரியர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
  இந்தப் பேரணியில் பாஜகவுக்கும், ஏபிவிபி இயக்கத்துக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பபட்டன. கால்சா கல்லூரியிலிருந்து தில்லிப் பல்கலைக்கழகம் வரை இந்தப் பேரணி நடைபெற்றது.
  இந்தப் பேரணியையொட்டி, அந்தப் பகுதி முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
  2 ஏபிவிபி மாணவர்கள் கைது: ராம்ஜஸ் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் தாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும் கல்லூரிக்கு வெளியிலிருந்து வந்தவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஏபிவிபி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இடதுசாரி அமைப்பு மாணவர்களைக் தாக்கியதாக, ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த இரு மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
  காவல்துறைக்கு நோட்டீஸ்: ராம்ஜஸ் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மோதல் சம்பவத்தின்போது போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இதுகுறித்து பதிலளிக்குமாறு தில்லி காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai