Enable Javscript for better performance
கடன் ஏய்ப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    
    ArunJetl

    வங்கிகளில் கடன் வாங்கி, திருப்பித் தராமல் ஏய்ப்பவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
    பக்கிங்ஹாம் அரண்மனையில நடைபெறும் இந்திய - பிரிட்டன் கலாசார ஆண்டு விழாவில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள அருண் ஜேட்லி, அங்கு செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்து உரையாடினார்.
    அப்போது அவர் கூறியதாவது:
    இந்தியாவில் கடன் ஏய்ப்பு செய்தவர்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி பிரிட்டனில் அடைக்கலம் பெறும் விவகாரம் குறித்து பிரிட்டன் அரசுடன் நிச்சயம் பேசுவேன்.
    இந்திய அரசைப் பொருத்தவரை, கடனை வாங்கிவிட்டு திருப்பித் தராமல் ஏய்க்கும் குற்றத்தை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
    வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தாங்கள் கொடுத்த கடன் பணத்தை கடனாளிகளிடமிருந்து ஒரு பைசா விடாமல் வசூலிப்பதற்கு அரசு முழு ஆதரவு அளிக்கும். இந்திய அரசு எடுத்த இந்தக் கடுமையான நிலைப்பாட்டால்தான் சில கடன் ஏய்ப்பாளர்கள் (விஜய் மல்லையா) நாட்டைவிட்டு ஓடி வந்து இங்கு ஒளிந்துள்ளனர். கடன் வசூல் செய்வதற்கு சட்டம் வழங்கியுள்ள அனைத்து வாய்ப்புகளையும் எங்களது புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai