சுடச்சுட

    

    கர்நாடக பயணத்தில் பாதுகாப்பு: சித்தராமையாவுக்கு பினராயி விஜயன் நன்றி

    By DIN  |   Published on : 01st March 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலம், மங்களூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அளித்த பாதுகாப்புக்காக அந்த மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
    மங்களூரில் பினராயி விஜயன் கடந்த 25-ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்தபோது, கேரளத்தில் ஹிந்து அமைப்பினருக்கு எதிரான தாக்குதலின் பின்னணியில் அவர் இருப்பதாக குற்றம்சாட்டி அன்றைய தினத்தில் பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மங்களூரில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பினராயி விஜயன் கலந்து கொண்ட 2 நிகழ்ச்சிகள் தவிர மங்களூரில் மற்றவர்கள் நடத்தத் திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் போலீஸார் தடை விதித்தனர். இதன்மூலம் பினராயி விஜயன் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்து முடிந்தன.
    இதையடுத்து கேரளத்துக்கு திரும்பிய பினராயி விஜயன் அங்கிருந்தபடி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தனது சுற்றுப்பயணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும், தமது பயணத்துக்கு ஆதரவு அளிக்கவும் நிர்வாக ரீதியில் எடுத்த முடிவுக்காகவும், தாம் பங்கு பெற்ற நிகழ்ச்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai