சுடச்சுட

  

  கார்கில் தியாகி மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல்: தில்லி போலீஸார் வழக்குப் பதிவு

  By DIN  |   Published on : 01st March 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Gurmehar

  கார்கில் போரில் தமது தந்தை இறந்தது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட தில்லிப் பல்கலைக்கழக மாணவிக்கு சமூக வலைதளங்களில் பலாத்கார அச்சுறுத்தல்கள் வந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தேச விரோதக் கருத்துகளைக் கூறியதாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித், தில்லி ராம்ஜஸ் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் அழைக்கப்பட்டிருந்தார்.
  இதற்கு பாஜக ஆதரவு அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஏபிவிபி மாணவர்களுக்கும், இடதுசாரி ஆதரவு ஏஐஎஸ்ஏ மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
  இதனைத் தொடர்ந்து, தில்லி பல்கலைக்கழக மாணவியான குர்மெஹர் கௌர், தமது முகநூலில் ஏபிவிபி மாணவர்களுக்கு எதிராக பதிவிட்டிருந்தார்.
  இந்நிலையில், அந்த மாணவிக்கு சிலர் சுட்டுரையில் பலாத்கார அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி தில்லி மகளிர் ஆணையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், மாணவி குர்மெஹருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தில்லி காவல்துறையை மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, மாணவிக்கு பலாத்கார அச்சுறுத்தல் விடுத்த மர்மநபர்கள் மீது தில்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
  பிரசாரத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு: இதனிடையே, ஏபிவிபி மாணவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்வதிலிருந்து விலகுவதாக மாணவி குர்மெர் கௌர் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai