சுடச்சுட

  

  கொழும்பில் இந்தியத் தூதரகம் முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 01st March 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய, அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதரகங்கள் முன்பு தமிழர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
  இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின்போது இரு தரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
  அந்தக் காலகட்டத்தில் ஏராளமானோர் மர்மமான முறையில் காணாமல் போனதற்கு இலங்கை அரசின் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டமே காரணம் என்று கூறப்படுகிறது.
  இந்தச் சூழலில், இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த சர்வதேசப் பார்வையாளகள் பங்கேற்கும் விசாரணை அமைப்பை உருவாக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் இலங்கை ஒப்புக் கொண்டது. மேலும், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நல்லிணக்கப் பணிகளை விரைந்து முடிக்கவும், தமிழர்களிடமிருந்து ராணுவம் கைப்பற்றிய நிலங்களைத் திருப்பியளிக்கவும் இலங்கை அரசு ஒப்புக்கொண்டது.
  எனினும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இலங்கை அரசு தாமதப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
  இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் ஜெனீவாவில் திங்கள்கிழமை தொடங்கியது. அந்தக் கூட்டத்தில், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு கூடுதல் அவகாசம் கேட்கும் எனத் தெரிகிறது.
  இந்தச் சூழலில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன் செவ்வாய்கிழமை திரண்ட ஏராளமான பொதுமக்கள் தமிழர்கள் பகுதிகளிலிருந்து ராணுவம் வெளியேறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  மேலும், தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைக்கக் கூடாது எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.
  இதேபோல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதரகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இறுதிக்கட்டப் போரின்போது மர்மமான முறையில் மாயமானவர்களின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பான்மையாகக் கலந்துகொண்டனர் என்று தகவல்கள் தெரிவிகின்றன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai