சுடச்சுட

  

  சட்டம், ஒழுங்கு விவகாரம்: கேரள பேரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

  By DIN  |   Published on : 01st March 2017 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்க அந்த மாநில சட்டப் பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
  கேரள மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளதாக அந்த மாநில சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
  இந்தத் தீர்மானத்துக்குப் பதிலளித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: கேரளத்தில் சமூக விரோதக் கும்பல்களுக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்துவதில் போலீஸாரின் பங்கு பாராட்டத்தக்கது.
  மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு முகாந்திரம் அற்றது. எனவே இருகுறித்து விவாதிக்கத் தேவையில்லை என்றார் பினராயி விஜயன்.
  எனினும், முதல்வரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா (காங்கிரஸ்), ’’மாநிலத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக குண்டர்களின் ஆட்சி நடக்கிறது. குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துவிட்டது'' என்று குற்றம் சாட்டினார். முதல்வரின் விளக்கத்தைத் தொடர்ந்து, ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கு அவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் அனுமதி மறுத்ததையடுத்து எதிக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
  பாஜக உறுப்பினர் ஓ. ராஜகோபால், காங்கிரஸ் (எம்) கட்சி உறுப்பினர் கே.எம். மாணி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai