சுடச்சுட

  

  சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்ஸல் ஆதரவாளர்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
  இதுகுறித்து அரசு சிறப்பு வழக்குரைஞர் அமீன் கான் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
  சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் பாபுலால் சர்மா, தரக் குண்டூ ஆகிய இருவரை போலீஸார் கடந்த 2013-ஆம் ஆண்டு கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருள்களும், வெடி மருந்து தயாரிப்பதற்கான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அவர்களது கூட்டாளிகளான கட்டியாராம் நரேடி, ராஜேஷ் துருவா, சத்ருகன் வைஷ்ணவ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
  இவர்கள் அனைவரும் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, பிலாஸ்பூர் என்ஐஏ நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  அந்த வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆர்.பி. சர்மா, அந்த ஐந்து பேரின் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்தார்.
  மேலும், அவர்கள் அனைவருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
  சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஒன்றும், தண்டேவாடா மாவட்டத்தில் ஒன்றும் என இரு என்ஐஏ நீதிமன்றங்கள் உள்ளன.
  அந்த நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளிலேயே, இந்த வழக்கிலான தீர்ப்புதான் முதலாவதாக வழங்கப்பட்டுள்ளது என்றார் அமீன் கான்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai