சுடச்சுட

  

  சுற்றுச்சூழல் வரையறையிலிருந்து 886.7 சதுர கி.மீ. பகுதிக்கு விலக்கு: கேரள அரசு வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 01st March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நிலமாக வரையறுக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து 886.7 சதுர கிலோமீட்டர் இடத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.
  மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
  அந்த அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனங்களாக இருக்க வேண்டிய பகுதிகளாக சில இடங்களைத் தேர்வு செய்து அவற்றை ’சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள்' என்று வரையறைப்படுத்தியுள்ளது.
  கேரள அரசுக்கு அறிவிக்கை: இந்நிலையில், கஸ்தூரி ரங்கனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசுக்கு மத்திய அரசு சார்பில் அண்மையில் ஓர் அறிவிக்கை அனுப்பப்பட்டது. அதில், கேரளத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் 9,993.7 சதுர கி.மீ. பகுதிகள் ’சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களாக' வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பகுதிகளில் வனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்ப்பட்டிருந்தது.
  கேரள அரசு வலியுறுத்தல்: கஸ்தூரி ரங்கனின் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, மத்திய அரசுக்கு கேரள அரசு சார்பில் கடந்த 23-ஆம் தேதி பதில் அனுப்பப்பட்டது. அதில், கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 9,993.7 சதுர கி.மீ. பகுதிகளில் சுமார் 886.7 சதுர கி.மீ. பகுதிகளில் 123 கிராமங்கள் அமைந்துள்ளன. எனவே, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான வரையறையிலிருந்து இந்தப் பகுதிக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
  முதல்வர் உறுதி:- இந்நிலையில், இதுதொடர்பாக கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது அவர், ’’இந்த விவகாரத்தில் கேரள மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கிறேன். தேவைப்படும்பட்சத்தில், மத்திய அரசை மீண்டும் அணுகுவோம்'' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai