சுடச்சுட

  
  YasinBhatkal

  தம்மை தனிமைச் சிறையில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் தில்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
  ஹைதராபாதில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கலை என்ஐஏ அதிகாரிகள் அதே ஆண்டு கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் பேரில், அவருக்கு தில்லி என்ஐஏ நீதிமன்றம் கடந்த ஆண்டு மரண தண்டனை விதித்தது.
  இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள திகார் சிறையில் யாசின் பட்கல் அடைக்கப்பட்டார். அங்கு அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
  இந்நிலையில், அவர் தில்லி என்ஐஏ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், தாம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு தம்மை தனிமைச் சிறையில் அடைப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார்.
  இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு திகார் சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai