Enable Javscript for better performance
தானேயில் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    
    rupees

    தானே: மராட்டிய மாநிலம் தானேயில் இருவேறு இடங்களில் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    தானே, ஜாம்பளிநாக்கா சாலையில் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஒரு காரில் தடை செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீஸார் அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து காரில் இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிப்பட்டவர்கள் 3 பேரும் மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த தயாசங்கர் யாதவ் (28), மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த பங்கஜ் கோயல் (40), காட்கோபர் பகுதியை சேர்ந்த சுனிக் முத்துராஜ் (29) என்பது தெரியவந்தது.

    காரில் இருந்து கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மொத்த தொகை ரூ.46 லட்சம் என தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai