Enable Javscript for better performance
தில்லியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல்

    By DIN  |   Published on : 01st March 2017 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்து அங்கு போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
    மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தொலைபேசிக்கு செவ்வாய்க்கிழமை மாலை அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தில்லியின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
    இதுகுறித்து தில்லி காவல்துறைக்கு மத்தியப் பிரதேச காவல்துறை தகவல் அளித்தது. அதன்பேரில் தில்லி போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஜபல்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தொலைபேசியை தொடர்பு கொண்டு பேசிய நபர், இணையவசதி தொலைபேசியை பயன்படுத்தியுள்ளார். அவர் யாரென்பது? என்பது குறித்தும் தில்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai