Enable Javscript for better performance
தேசிய மீனவர் பேரவை செயற்குழுக் கூட்டம் தில்லியில் மார்ச் 19-இல் நடக்கிறது- Dinamani

சுடச்சுட

    

    தேசிய மீனவர் பேரவை செயற்குழுக் கூட்டம் தில்லியில் மார்ச் 19-இல் நடக்கிறது

    By DIN  |   Published on : 01st March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய மீனவர் பேரவையின் செயற்குழுக் கூட்டம் வரும் மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ளது.
    இதுகுறித்து பேரவையின் தலைவர் மா.இளங்கோ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
    தேசிய மீனவர் பேரவையின் செயற்குழுக் கூட்டம் மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு பேரவைத் தலைவர் மா.இளங்கோ தலைமை வகிக்கிறார்.
    தமிழ்நாடு, ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், புதுச்சேரி, மகாராஷ்டிரம், கோவா ஆகிய கடற்கரை மாநிலங்களைச் சேர்ந்த மீனவ அமைப்பின் தலைவர்களும் உத்தர பிரதேசம், தில்லி, பிகார், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் மீனவ அமைப்பின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
    இக்கூட்டத்தின் போது பேரவையின் தலைவர்கள் தில்லியில் உள்ள மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரைச் சந்தித்து மீனவ சமுதாயத்தினர் எதிர் கொண்டுள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai