Enable Javscript for better performance
தொலைபேசி அழைப்பை ஏற்காத அரசு அதிகாரிகள்: ம.பி. பேரவையில் முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    தொலைபேசி அழைப்பை ஏற்காத அரசு அதிகாரிகள்: ம.பி. பேரவையில் முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 01st March 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு அதிகாரிகள் எனது தொலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பாபுலால் கெளர், அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.
    மத்தியப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரே, அரசு அதிகாரிகள் குறித்து பேரவையில் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தனது தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னை குறித்து பேரவையில் பாபுலால் கெளர் கேள்வி எழுப்பினார். இதற்கு நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் மாயா சிங் பதிலளித்தார்.
    அப்போது குறுக்கீட்டு பேசிய பாபுலால் கெளர், ’எனது தொகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பான பிரச்னை குறித்து விவாதிக்க நகர்புற நிர்வாகத் துறை ஆணையரை தொலைபேசியில் அழைத்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை ஏற்கவில்லை. மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் இதேபோலத்தான் நடந்து கொள்கிறார்கள், குப்பைக் கிடங்கு உள்ள பகுதிக்கு அருகே வசிக்கும் மக்களில் 93 சதவீதம் பேருக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது' என்றார்.
    அவரை ஆதரித்துப் பேசிய காங்கிரஸைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் அஜீத் சிங், ’அரசு அதிகாரிகள் முன்னாள் முதல்வருக்கே இந்த அளவுக்குத்தான் மரியாதை அளிக்கிறார்கள் என்றால், மற்றவர்களின் நிலைமை குறித்து விளக்கத் தேவையில்லை' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai