சுடச்சுட

  

  நாட்டின் முதல் ’ஹெலிகாப்டர்' நிலையம் தில்லியில் திறப்பு

  By DIN  |   Published on : 01st March 2017 03:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  helicopter-station

  தில்லியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் நிலையத்தில், ’பவான் ஹன்ஸ்' நிறுவன ஹெலிகாப்டரில் பயணிப்பதற்காக வாங்கிய டிக்கெட்டுகளை காட்டும் பயணிகள்.

   

  நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ’ஹெலிபோர்ட்' (ஹெலிகாப்டர் நிலையம்), தில்லியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
  பொதுத் துறை நிறுவனமான ’பவான் ஹன்ஸ்' நிறுவனத்தால், தில்லியில் ரோஹிணி பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் நிலையம், தினமும் 150 பயணிகளை கையாளும் வசதியை கொண்டது. மேலும், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடிய கட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் உள்ளன.
  இந்த ஹெலிகாப்டர் நிலையத்தை, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:
  தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக, ஹெலிகாப்டர்களுக்கான ஒருங்கிணைந்த நிலையம் தில்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை, ஹெலிகாப்டர் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உலக அளவில் ஒப்பிடும்போது, நமது நாட்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றார் அசோக் கஜபதி ராஜு.
  இந்த நிகழ்ச்சியில், விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், பவான் ஹன்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் பி.பி.சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai