சுடச்சுட

    

    பெங்களூரில் உருக்கு மேம்பாலம் கட்டுவதில் காங்கிரஸ் ஊழல்

    By DIN  |   Published on : 01st March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yediyura

    பெங்களூரில் உருக்கு மேம்பாலம் கட்டுமானப் பணியில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக, கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா குற்றஞ்சாட்டினார்.
    பெங்களூரு மல்லேஸ்வரத்தில் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகிகளை வரவேற்று, செய்தியாளர்களிடம் எடியூரப்பா பேசியது:
    பெங்களூரில் உருக்குப் பாலம் கட்டுவதில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். குறிப்பாக, முதல்வர் சித்தராமையா குடும்பத்தினர் இதில் லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
    சட்ட மேலவை உறுப்பினர் கோவிந்தராஜுயின் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் டைரி கிடைத்தது. அதில், காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துக்கு அக் கட்சி நிர்வாகிகள் நிதி வழங்கிய தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இந்த விவகாரம் வெளியானதும், பாஜகவின் சட்ட மேலவை உறுப்பினர் லெஹர்சிங்கின் டைரி என்று போலியான டைரியை காங்கிரஸார் வெளியிட்டுள்ளனர். 2013-ஆம் ஆண்டில் லெஹர்சிங் பாஜக கட்சியில் இல்லை.
    எனவே, அவரது டைரியில் பாஜக தொடர்பான விவரங்கள், இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் அரசின் தோல்வியால், மாநிலத்தில் பாஜகவுக்கு அதிக அளவில் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.
    முன்னாள் எம்.எல்.ஏ. தினகர் ஷெட்டி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமோத் ஹெக்டே உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளதன் மூலம் வட கர்நாடக மாவட்டத்தில் பாஜகவின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.
    நிகழ்ச்சியில், பாஜக மாநிலச் செயலர் ஷோபா கரந்தலஜே, கோவிந்த கார்ஜோல், அனந்த்குமார் ஹெக்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai