சுடச்சுட

    

    ’மும்பை மாநகராட்சியில் பாஜக-சிவசேனை கைகோக்க வேண்டும்'

    By DIN  |   Published on : 01st March 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மும்பை மாநகராட்சியில் பாஜகவும், சிவசேனையும் கைகோக்க வேண்டுமென்று மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜக மூத்த அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
    227 வார்டுகளைக் கொண்ட பிருஹன் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 114 வார்டுகளை எந்தக் கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக சிவசேனை 84 இடங்களிலும், பாஜக 82 இடங்களிலும் வென்றுள்ளன.
    இந்நிலையில் மும்பையில் அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது: மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசுக்கு சிவசேனையால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த இரு கட்சிகளுக்கு இடையே அமைந்த கூட்டணி மிகவும் இயல்பானது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் பாஜக-சிவசேனை கூட்டணி மும்பை மாநகராட்சியிலும் தொடர வேண்டும் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai