சுடச்சுட

    

    முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 3-ம் தேதி ஐவர் குழு ஆய்வு

    By DIN  |   Published on : 01st March 2017 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mullai

    திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 3-ஆம் தேதி துணைக்கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

    தமிழக, கேரள மக்களின் முக்கிய நீராதாரமாக இருந்து வருவது முல்லை பெரியாறு அணை. இந்த அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாசன வசதியை பெற்றுவருகின்றன.  

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியதன் பேரில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இந்த ஐவர் குழுவினர் 6 மாதங்களுக்கு ஒருமுறை அணையில் ஆய்வு நடத்துவர்.

    அதன்படி, 5 மாதங்களுக்குப் பிறகு ஐவர் கொண்ட துணைக்கண்காணிப்பு குழுவினர் வரும் மார்ச் 3-ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வில் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, வெளியேற்றம், மழைப்பதிவு பற்றி ஆய்வு செய்ய உள்ளது.

    மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அசோக் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆய்வில் தமிழக பொதுப்பணித்துறை, கேரள நீர்ப்பாசனத்துறை உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai