சுடச்சுட

    

    ராணுவத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரம்: பாரிக்கர் மீது சிவசேனை தாக்கு

    By DIN  |   Published on : 01st March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பதற்காக நடைபெற இருந்த தேர்வுக்கு தயார் செய்யப்பட்டிருந்த வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு எதிராக சிவசேனை குற்றம்சாட்டியுள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ’சாம்னா'வில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
    பல்கலைக்கழகத் தேர்வுகள் உள்பட பல்வேறு அரசு தேர்வுகளின் வினாத் தாள்கள், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்து வரும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
    தற்போது, ராணுவ ஆள்சேர்ப்புக்காக நடைபெற இருந்த தேர்வுக்கான கேள்வித் தாளும் கசிந்துள்ளது. ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துகொண்டிருக்கும் வேளையில் கேள்வித்தாள்கள் கசிவது மத்தியில் ஆளும் பாஜக அரசின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.
    பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா முதல்வர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், தற்போது தாம் வகித்துவரும் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவிக்கான பணிகளை அவர் சிறப்பாக செய்ய வேண்டும்.
    கேள்வித் தாள் கசிந்திருப்பது தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரம் ஆகும். எனவே, இந்த விவகாரத்துக்கான முழு பொறுப்பையும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    தேசியவாதம், தியாகம் ஆகியவை குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததில் தேசியவாதம் இருக்கும்போது,
    ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பதிலும் அது இருக்க வேண்டும் என்று ’சாம்னா'வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    முன்னதாக, மகாராஷ்டிரம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் ராணுவ ஆள்சேர்ப்புக்காக கடந்த சனிக்கிழமை எழுத்துத் தேர்வு நடைபெற இருந்தது.
    எனினும், அதற்கு சில தினங்களுக்கு முன்பு கேள்வித் தாள் கசிந்தது. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது.
    இந்த விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை இரவு 18 பேரும், திங்கள்கிழமை 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai