Enable Javscript for better performance
வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

    By DIN  |   Published on : 01st March 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
    மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் பாஜக தலைவர்கள் தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
    உத்தரப் பிரதேச தேர்தலில் உரிய வாக்காளர் அட்டையுடன் வாக்களிக்க வரும் அனைவருக்கு வாக்குச் செலுத்த அனுமதிக்க வேண்டும். ஏனெனில், இதுவரை முடிந்துள்ள 5 கட்டத் தேர்தலில் பல இடங்களில் வாக்காளர் அட்டையுடன் சென்றவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறித் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களது பெயர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, கடைசி இரு கட்டத் தேர்தலிலும் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் அனைவரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஏனெனில், இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai