சுடச்சுட

  
  rocket

  எதிரி நாட்டு ஏவுகணையை நடுவானிலேயே மறித்து தகர்க்கவல்ல அதிவேக இடைமறி ஏவுகணையை இந்தியா இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதித்துள்ளது.
  போர் சமயங்களில், எதிரி நாடுகளின் குறிப்பிட்ட பகுதியை அழிக்க ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு எதிரி நாடுகள் செலுத்தும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, நடுவானிலேயே அவற்றைத் தகர்க்கும் வகையில் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகம் (டிஆர்டிஓ) அதிவேக இடைமறி ஏவுகணையை தயாரித்துள்ளது.
  "சூப்பர்சோனிக் இன்டர்செப்டர்' என்ற இந்த ஏவுகணையானது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.
  ரேடார் உள்ளிட்ட அதியுணர் திறன் தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  இரண்டாவது சோதனை: இந்நிலையில், ஒடிஸô மாநிலம், அப்துல்கலாம் தீவில் இந்த ஏவுகணை இரண்டாவது முறையாக புதன்கிழமை சோதனைக்குள்படுத்தப்பட்டது.
  இதற்காக, முதலில், அப்துல்கலாம் தீவு அருகே சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட "பிருத்வி' ஏவுகணையானது சண்டீப்பூர் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது. சரியாக காலை 10.10 மணிக்கு அந்த ஏவுகணையை விஞ்ஞானிகள் இயக்கினர்.
  ஏவுகணை புறப்பட்ட 40 நொடிகளில், அப்துல்கலாம் தீவில் நிலைநிறுத்தப்பட்ட "சூப்பர்சோனிக் இன்டர்செப்டர்' இடைமறி ஏவுகணையில் பொருத்தப்பட்ட ரேடார்கள், சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கின.
  இதையடுத்து, சுமார் 6 நொடிகளில் பெரும் சத்தத்துடன் இடைமறி ஏவுகணை இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தது. பின்னர் சில நிமிடங்களிலேயே, வானில் 25 கிலோமீட்டருக்கு அப்பால் வந்து கொண்டிருந்த பிருத்வி ஏவுகணையை இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக தகர்த்தது.
  இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக டிஆர்டிஓ விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அவர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் பாராட்டுத் தெரிவித்தார்.
  இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வெற்றியானது இந்தியாவின் ஏவுகணை அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai