சுடச்சுட

    

    அரசியலை கட்டுப்படுத்துபவராக வாக்காளர்கள் இருக்க வேண்டும்

    By DIN  |   Published on : 02nd March 2017 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    varunganthi

    அரசியல் போக்கை கட்டுப்படுத்துபவராக வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்று சுல்தான்பூர் தொகுதி பாஜக எம்.பி.யும், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி தெரிவித்தார்.
    1951ஆம் ஆண்டு மக்களவையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக் கோரி வருண் காந்தி மசோதா கொண்டு வந்துள்ளார். அதில் அவர், மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி, எம்.எல்.ஏ.க்கள்) தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில் திறம்பட பணியாற்றவில்லை என்று சம்பந்தப்பட்ட தொகுதியில் இருக்கும் 75 சதவீத வாக்காளர்கள் கருதும்பட்சத்தில், அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள உரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
    இதுகுறித்து தில்லியில் வருண் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    தேர்தல் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியலில் பங்குபெறுபவராக மட்டும் வாக்காளர்கள் இருத்தல் கூடாது. அதைக் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருத்தல் வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே, மக்கள் பிரிதிநிதிகளின் செயல்பாட்டில் திருப்தியில்லை எனில், அவர்களை வாக்காளர்கள் திருப்பி அழைத்துக் கொள்ளும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளேன்.
    இந்த நடைமுறை ஏற்கெனவே பல நாடுகளில் அமலில் உள்ளது. நமது நாட்டிலும் இந்த முறையைக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் வருண் காந்தி.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai