சுடச்சுட

  

  மத்திய அமைச்சர்களில் சிலர் அரசியல் சகிப்பின்மையுடன் நடந்துகொள்ளும் போக்கை நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் (மார்ச் 9) எழுப்புவோம் என்று மக்களவை காங்கிரஸ் துணைத் தலைமை கொறடா கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
  கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: மத்திய அமைச்சர் பொறுப்புக்கு கிரண் ரிஜிஜு பொருத்தமானவர் அல்ல. அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
  மத்திய அமைச்சர்களில் சிலர் அரசியல் சகிப்பின்மையுடன் நடந்து கொள்கின்றனர். இந்தப் பிரச்னையை மார்ச் 9-ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத் தொடரில் எழுப்புவோம்.
  ரிஜிஜுவின் கருத்து அச்சுறுத்தும் வகையில் இருந்ததால் மாணவி குர்மெஹர் தில்லியிலிருந்து தனது சொந்த மாநிலமான பஞ்சாபுக்கு சென்று விட்டார் என்றார் வேணுகோபால்.
  கடந்த 1999-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ஒருவரின் மகள் குர்மெஹர் கவுர் அண்மையில் விடியோ பதிவொன்றை வெளியிட்டார்.
  அதில், எனது தந்தையை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லவில்லை. போர் தான் கொன்றது. எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் தங்களது பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, பாஜக ஆதரவு அமைப்பான ஏபிவிபி அவருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கிரிண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கையில், ’வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனதை சிலர் (இடதுசாரிகள்) மாசுபடுத்தியுள்ளனர். குர்மெஹர் கவுர் அவருடைய கருத்துகளை தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம்' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai