Enable Javscript for better performance
இந்திய மீனவர்கள் 26 பேரை கைது செய்த பாகிஸ்தான்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய மீனவர்கள் 26 பேரை கடல் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது.
    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் 26 பேர், அராபிய கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர், அவர்களை கைது செய்து கொண்டு சென்றனர். இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான 4 படகுகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
    இதேபோல், கடந்த வாரமும் இந்திய மீனவர்கள் 36 பேரை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    39 பாகிஸ்தான் கைதிகளை விடுவித்த இந்தியா: இதனிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த 18 மீனவர்கள் உள்பட அந்நாட்டைச் சேர்ந்த 39 கைதிகளை இந்தியா புதன்கிழமை விடுதலை செய்தது. நல்லெண்ண நடவடிக்கையாக கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவைச் சேர்ந்த 217 மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. அதையடுத்து இந்தியாவும் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்திருக்கிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai