சுடச்சுட

    

    இந்தியாவில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் அளவு சராசரியைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    பொதுவாக ஜனவரி மாதத்தில் வெயில் அதிகம் இருக்காது. ஆனால் கடந்த ஜனவரியில், 116 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பல இடங்களில் வெயில் சுட்டெரித்தது.
    இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு கோடைகாலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் வெயில் அதிகரிக்கும். முக்கியமாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் சராசரியைவிட ஒரு டிகிரி செல்சியஸுக்கு மேல் அனல் தகிக்கும். பிற பகுதிகளில் கோடையில் எப்போதும் இருப்பதைவிட ஒரு டிகிரி வரை கூடுதலாக வெப்பம் நிலவும். பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சண்டீகர், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த கோடையில் அதிகம் பாதிக்கப்படும்.
    கடந்த ஆண்டு வெயில் கொடுமையால் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; இதில் 400 பேர் ஆந்திரம், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai