Enable Javscript for better performance
’உ.பி. அமைச்சர் பிரஜாபதியை சிறைக்கு அனுப்ப வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச அமைச்சர் காயத்ரி பிரஜாபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 16 வயது சிறுமி, அந்த அமைச்சர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
    இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
    என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பிரஜாபதியும், அவரது கூட்டாளிகளும், சிறையில் கைதியாக அடைக்கப்பட்டிருப்பதை பார்க்க விரும்புகிறேன். எங்களது வாழ்க்கையை நிரந்தரமாக அவர் சீரழித்து விட்டார் என்றார்.
    உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் தாயார், காயத்ரி பிரஜாபதிக்கு எதிராக அந்த மாநில காவல்துறை தலைவரிடம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதை காவல்துறை தலைவர் ஏற்கவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார். அதில், பிரஜாபதியும், அவரது கூட்டாளிகளும் தன்னை தொடர்ந்து 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி பலாத்காரத்துக்கு ஆளாக்கியதாகவும், தனது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்திருந்தார். இதை கடந்த மாதம் 18-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், காயத்ரி பிரஜாபதி, அவரது கூட்டாளிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது.
    இதையடுத்து பிரஜாபதி மீது உத்தரப் பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் சமாஜவாதி வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai