Enable Javscript for better performance
ஏஐஎஸ்ஏ ஆதரவாளர்களை தாக்கியதாக புகார்: 2 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது ஏபிவிபி- Dinamani

சுடச்சுட

    

    ஏஐஎஸ்ஏ ஆதரவாளர்களை தாக்கியதாக புகார்: 2 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது ஏபிவிபி

    By DIN  |   Published on : 02nd March 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இடது சாரி அமைப்பான அகில இந்திய மாணவர்கள் சங்க (ஏஐஎஸ்ஏ) மாணவர்களைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவரை பாஜக ஆதரவு ஏபிவிபி இயக்கம் இடைநீக்கம் செய்துள்ளது.
    ஏபிவிபி அமைப்புக்கு எதிராக தில்லியில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் சில பேராசிரியர்களும் பங்கேற்றனர். பேரணி முடிவடைந்த பிறகு, ஏஐஎஸ்ஏ ஆதரவாளர்கள் 2 பேரை ஏபிவிபி உறுப்பினர்கள் 2 பேர் கழுத்தை நெரித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஏபிவிபி உறுப்பினர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி அவர்கள் இருவரையும் ஏபிவிபி அமைப்பு புதன்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் சகேத் பகுகுணா கூறுகையில், ’அவர்களின் செயலைக் கண்டிக்கிறோம்; ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக இருவரையும் அமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளோம்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai