சுடச்சுட

  

  கால்நடைகளுக்கு ஒருங்கிணைந்த காப்பீடு: கேரள அரசு அறிமுகம்

  By DIN  |   Published on : 02nd March 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரளத்தில் கால்நடைகளுக்கான ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டம் நடப்பு நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த மாநில கால்நடைத் துறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்தார்.
  கேரள சட்டப் பேரவையில் புதன்கிழமை இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: இந்தக் காப்பிட்டுத் திட்டத்தின்கீழ் நிகழாண்டில் 40,000 கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கப்படும். தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  இத்திட்டத்தின் கீழ் 25 சதவீத காப்பீட்டுத் தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மாநில அரசு 50 சதவீத தொகையையும், உள்ளாட்சி நிர்வாகம் மீதியுள்ள 25 சதவீதத் தொகையையும் செலுத்தும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.
  தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மாநிலத்தில் இதுவரை 34.66 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர். கேரளத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இடதுசாரி அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 7,057 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai