குர்மெஹரை ஆதரிப்போரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்: ஹரியாணா அமைச்சர்
By DIN | Published on : 02nd March 2017 01:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
’ஏபிவிபி மாணவர் அமைப்புக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக, தில்லி பல்கலைக்கழக மாணவி குர்மெஹர் கௌருக்கு ஆதரவு தெரிவிப்போரை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்' என்று ஹரியாணா மாநில அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ அதிகாரியின் மகளான குர்மெஹர் கௌர், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி-க்கு எதிராக சமூகவலைதளங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும், தனது தந்தையை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்யவில்லை; போர்தான் அவரை கொன்றது என்று குர்மெஹர் தெரிவித்த கருத்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளுக்கு உள்ளாகியது.
இந்நிலையில், ஹரியாணா மாநில அமைச்சர் அனில் விஜ், சண்டீகரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நேரடியாகவும், மறைமுகமாகவும் போர் தொடுத்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு குர்மெஹர் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். அது, முறையற்றது. அவரும், அவரை ஆதரிப்போரும் இந்தியாவில் வாழ உரிமையில்லை. அவர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றார் அனில் விஜ்.