Enable Javscript for better performance
செல்லாத நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்: புதிய சட்டம் அமல்- Dinamani

சுடச்சுட

    

    செல்லாத நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்: புதிய சட்டம் அமல்

    By DIN  |   Published on : 02nd March 2017 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    5001000

    செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை, 10க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கையிருப்பில் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
    இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கையிருப்பில் வைத்திருத்தல், அவற்றை பரிமாற்றம் செய்தல், பழைய ரூபாய் நோட்டுகளை பெறுதல் ஆகியவற்றை குற்றச் செயல்களாக உறுதி செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
    இந்த மசோதா, 10க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் வரை அல்லது அவர்கள் வைத்திருக்கும் நோட்டுகளை போல 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்க வழிவகை செய்கிறது.
    இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த 27-ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, அந்த மசோதா சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
    எனினும், ஆய்வுப் பணிகளுக்காக 25 செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பதற்கு, புதிய சட்டம் அனுமதிக்கிறது.
    கடந்த நவம்பர் 9-ஆம் தேதி முதல் டிசம்பர் 30 தேதி வரை வெளிநாட்டில் தங்க நேரிட்டவர்கள், தங்கள் வசமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் தாங்கள் வெளிநாட்டில் தான் இருந்தோம் என்தற்கான உறுதிமொழியை அந்த நபர்கள் அளிக்க வேண்டும். எவரேனும் பொய்யான உறுதிமொழியை அளித்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பதற்கு புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    முன்னதாக கருப்புப்பணம், ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது.
    இதைத் தொடர்ந்து, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ரூ.500, ரூ.2,000 புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai