சுடச்சுட

  
  modi

  பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தில், ’’நிதீஷ் குமாரை தொடர்புகொண்டு பேசி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவர் நலமுடன் நீண்ட நாள் வாழ்வதற்கு கடவுள்கள் ஆசிகள் கிடைக்கட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
  நிதீஷ் குமாருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே சமீப காலம் வரை நல்லுறவு இல்லாத சூழலில், நிகழ்ச்சியொன்றில் இரு தலைவர்களும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டனர். மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை ஆதரித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத ஒரே முதல்வர் நிதீஷ் குமார் ஆவார்.
  லாலு, அமைச்சர்கள் வாழ்த்து: ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், நிதீஷ் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
  இதனிடையே, பாட்னாவில் சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த நிதீஷ் குமாருக்கு லாலுவின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத், அவரது சகோதரரும், சுகாதாரத் துறை அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், நிதியமைச்சர் அப்துல் பாரி சித்திக், அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான அசோக் செளதரி, சட்டப்பேரவை துணைத் தலைவர் ஷியாம் ரஜாக் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
  முன்னாள் அமைச்சர் ரஞ்சு கீதா, நிதீஷ் குமாருக்கு 66 ரோஜா உள்ளிட்ட மலர்களைக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai