சுடச்சுட

    

    பிரதமரின் படத்தை இழிவுபடுத்த தூண்டிய பிகார் அமைச்சர்: பேரவையில் பாஜக கடும் அமளி

    By DIN  |   Published on : 02nd March 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mp

    பிரதமர் மோடியின் புகைப்படத்தை இழிவுபடுத்தத் தூண்டிய அமைச்சர் அப்துல் ஜலீலைக் கண்டித்து பிகார் சட்டப்பேரவை வளாகத்துக்கு முன்பு புதன்கிழமை தர்ணாவில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள்.

    பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை இழிவுபடுத்த தூண்டிய காங்கிரஸ் அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி பிகார் சட்டப்பேரவையில் பாஜகவினர் புதன்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைக் கண்டித்து பிகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில கலால் துறை அமைச்சருமான அப்துல் ஜலீல் மஸ்தான் பங்கேற்றார்.
    அப்போது அவர், ’ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைக் கொண்டு வந்து மக்களை சிரமத்தில் தள்ளிய பிரதமர் மோடிக்கு தண்டனை கொடுங்கள்; அவரது புகைப்படத்தை காலணியால் அடியுங்கள்' எனத் தெரிவித்தார்.
    அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமரின் புகைப்படத்தை காலணியால் அடித்தனர்.
    இந்தக் காட்சிகள் அடங்கிய விடியோ, பிகாரில் இயங்கி வரும் ஓர் உள்ளூர் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்டது. இது, பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
    பேரவையில் அமளி: இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி பாஜக எம்எல்ஏ-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரதமரை இழிவுபடுத்திய அப்துல் ஜலீலை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
    முதல்வர் கண்டனம்: இதையடுத்து, அமைச்சர் அப்துல் ஜலீலுக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ’நாட்டின் பிரதமரை ஓர் அமைச்சர் இவ்வளவு தரக்குறைவாக இழிவுபடுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் என்ற முறையிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மதச்சார்பற்ற மகா கூட்டணி சார்பிலும் அமைச்சர் அப்துல் ஜலீலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
    இரு அவைகளும் ஒத்திவைப்பு: எனினும், இதனை ஏற்றுக்கொள்ளாத பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அமைச்சர் பதவியிலிருந்து அப்துல் ஜலீலை நீக்கினால் மட்டுமே அவையை நடத்த விடுவோம் என அவர்கள் கோஷமிட்டனர். தொடர் அமளியால், பேரவை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
    இதேபோல், சட்ட மேலவையில் பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அலுவல்கள் முடங்கியதால் மேலவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai