சுடச்சுட

  

  மத்தியில் 3 ஆண்டுகால ஆட்சியில் செய்த பணிகள் என்ன? பிரதமர் மோடிக்கு அகிலேஷ் கேள்வி

  By DIN  |   Published on : 02nd March 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  akilesh

  மத்தியில் கடந்த 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் செய்த பணிகள் என்ன? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வரும், சமாஜவாதி தேசியத் தலைவருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.
  இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், தேவ்ரியாவில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
  காங்கிரஸ் கட்சியை நாங்கள் எங்கள் மடியில் உட்கார அனுமதித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது மடியின் அளவு பெரிது. ஆகையால் மேலும் பல கூட்டணிக் கட்சிகளை உட்கார வைத்துள்ளார்.
  உத்தரப் பிரதேச சமாஜவாதி அரசின் 5 ஆண்டுகால பணிகள் குறித்த அறிக்கையை பிரதமர் கேட்டுள்ளார். அவரிடம் மத்தியில் கடந்த 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் செய்த பணிகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
  உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை அரசு திரும்பப் பெற்றதால், நாட்டு மக்கள் அனைவரும் வங்கிகளில் நீண்ட வரிசையில் பணத்தை டெபாசிட் செய்ய காத்துக் கிடந்தனர். ஆனால், இதுவரையிலும் எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது, எத்தனை பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது? என்பதை தெரிவிக்கவில்லை.
  உத்தரப் பிரதேச மக்கள், ஏற்கெனவே தங்களது பணத்தை டெபாசிட் செய்ய வரிசையில் காத்துக் கிடந்தனர். அதேபோல், பாஜகவைத் தோற்கடிக்க வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும்.
  சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியை இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான கூட்டணி என்று பாஜக விமர்சித்துள்ளது. இது 2 குடும்பங்களுக்கு, இடையேயான கூட்டணி அல்ல. அரசியலை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு 2 இளைஞர்கள் இடையே ஏற்பட்ட கூட்டணி ஆகும்.
  கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை, உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 300 இடங்களை பிடிப்பது குறித்து பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது தொங்கு சட்டப் பேரவை குறித்து பேசுகிறார். இதிலிருந்து அவர் தோல்வியடையப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார் அகிலேஷ் யாதவ்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai