சுடச்சுட

  

  மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் (எல்.பி.ஜி.) விலை ரூ.86 உயர்த்தப்பட்டுள்ளது.
  ஆண்டுதோறும் மானியத்துடன் குடும்பத்துக்கு 12 எரிவாயு உருளைகள் வழங்கப்படுகின்றன. அதன்பிறகு வாங்கப்படும் சமையல் எரிவாயு உருளை, சந்தை விலை நிலவரப்படியே எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்படும்.
  அந்த உருளையின் விலை புதன்கிழமை ரூ.86 உயர்த்தப்பட்டது. அதன்படி, ரூ.651.50-ஆக இருந்த மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ.737.50-ஆக உயர்ந்துள்ளது.
  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே, மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக, கடந்த மாதம் 1-ஆம் தேதி மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.66.50 அதிகரிக்கப்பட்டது. அதையடுத்து தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  மானிய எரிவாயு விலையும் உயர்வு: மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளையின் விலையும் 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மானியத்துடன் வாங்கும் சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ.434.93 ஆக உள்ளது.
  விமான எரிபொருளின் விலை லிட்டருக்கு ரூ.214 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வையடுத்து, விமானஎரிபொருள் லிட்டருக்கு ரூ.54,293 ஆக தற்போது விற்பனையாகிறது.
  சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலை, விமான எரிபொருளின் விலை ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் 1-ஆம் தேதி மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி சர்வதேச சந்தையில் அதன் விலை அதிகரித்திருப்பதால் இந்தியாவிலும் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai