Enable Javscript for better performance
மேற்கு வங்கம்: சிறார் கடத்தல் வழக்கில் பாஜக மகளிர் அணித் தலைவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மேற்கு வங்கம்: சிறார் கடத்தல் வழக்கில் பாஜக மகளிர் அணித் தலைவர் கைது

    By DIN  |   Published on : 02nd March 2017 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    JUHI

    மேற்கு வங்க மாநிலத்தில் சிறார் கடத்தல் வழக்கு தொடர்பாக, பாஜக மகளிர் அணித் தலைவர் ஜூஹி செளதுரியை குற்றப் புலனாய்வு போலீஸார் (சிஐடி) கைது செய்தனர்.
    ஜூஹி செளதுரியை, இந்திய-நேபாள எல்லையை ஒட்டியுள்ள படாசியா பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு சிஐடி போலீஸார் கைது செய்தனர்.
    ஜல்பைகுரியில் 17 சிறார்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படும் நான்காவது நபர், இவர் ஆவார்.
    இதற்கு முன்பு, இந்தச் சம்பவம் தொடர்பாக, தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த தத்தெடுத்தல் பிரிவு அதிகாரி சோனாலி மோண்டல், தன்னார்வ அமைப்பின் தலைவர் சந்தனா சக்ரவர்த்தி, அவருடைய சகோதரர் மானஸ் பெளமிக் ஆகியோரை சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
    மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் சிறார்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அங்குள்ள சிறார் இல்லங்களிலும், மருத்துவமனைகளிலும் சிஐடி போலீஸார் கடந்த நவம்பர் மாதம் சோதனை நடத்தினர். அதையடுத்து, 1 முதல் 14 வயதுக்குள்பட்ட 17 சிறார்களை வெளிநாட்டினருக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக, ஜல்பைகுரியில் உள்ள தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சோனாலி மொண்டல் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாஜக மகளிர் அணித் தலைவர் ஜூஹி செளதுரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
    ’அரசியல் சதி' - பாஜக: இதனிடையே, ஜூஹி செளதுரி கைது செய்யப்பட்டதில் அரசியல் சதி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஓர் அணியைப் போல சிஐடி காவல் துறையினர் செயல்படுகின்றனர். பாஜக தலைவர்களை இழிவுபடுத்துவதற்காக, திரிணமூல் அரசு சதி வேலையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. ஜூஹு செளதுரி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தவுடனேயே கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுவிட்டார்.
    ஆனால், கட்சியின் தொண்டராக அவர் நீடிப்பார். தேவைப்பட்டால், அவருக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவோம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai