சுடச்சுட

    

    ராணுவ வினாத்தாள் வெளியான விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மனோகர் பாரிக்கர் பரிந்துரை

    By DIN  |   Published on : 02nd March 2017 02:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணுவ வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதையடுத்து ஞாயிற்றுகிழமை நடக்கவிருந்த தேர்வு புனேவை ஒட்டியுள்ள 6 மையங்களில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    மேலும் 350 மாணவர்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் பயிற்சித் மையங்களில் இருந்து தேர்வு வினாத்தாளை பெற்றதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ தரப்பிலும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் ராணுவ வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai