சுடச்சுட

  

  உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் நகரில் 29-ஆவது சர்வதேச யோகா விழாவை அந்த மாநில ஆளுநர் கே.கே.பால் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  உத்தரகண்ட் மாநிலம் யோகக் கலை தோன்றிய தேவபூமி ஆகும். ஆன்மிக மனத்துடன் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச யோகா விழாவில் உலகம் முழுவதிலும் இருந்தும் எண்ணிலடங்காத மக்கள் பங்கேற்கின்றனர். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. யோகக் கலை இங்கிருந்து தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.
  யோகா விழா ஒவ்வோர் ஆண்டும் வசந்தகாலத்தை ஒட்டியே நடைபெறுகிறது. அப்போது, இமயமலையிலிருந்து பனிக்கட்டிகள் உருகி தெளிந்த கங்கை நீர் இங்கு பாய்ந்தோடும். அத்துடன், வசந்த காலத்தில் பூக்கும் மலர்களின் மிகச் சிறப்பான நறுமணமும் காற்றில் கலந்து வீசும் என்றார் கே.கே.பால்.
  இந்த விழாவில் காணொலி முறையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய ஆயுஷ் அமைச்சகம், உத்தரகண்ட் மாநில சுற்றுலாத் துறை ஆகியவை இணைந்து மேற்கொள்கிறது.
  இவ்விழாவில் துறவிகள், யோகா பயிற்றுனர்கள், யோகா ஆர்வலர்கள் என உலகெங்கிலும் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பினரும் பங்கேற்பார்கள்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai