சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு வாபஸால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படவில்லை

    By DIN  |   Published on : 02nd March 2017 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Modi-US_2126610f

    உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
    உத்தரப் பிரதேச மாநிலம், மகராஜ்கஞ்ச் நகரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
    உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தனர். ஆனால், மறுபுறம் ஓர் ஏழையின் மகன் (தன்னைக் குறிப்பிடுகிறார்), தனது கடின உழைப்பால், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முயன்று வருகிறார்.
    உண்மையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைவிட கடின உழைப்பே சக்திவாய்ந்ததாக உள்ளது. (ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை சர்வாதிகரமான முடிவு என்று ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென் கூறியதை பிரதமர் மோடி மறைமுகமாகக் குறிப்பிட்டார்).
    உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றியை முதல் ஐந்து கட்ட தேர்தலில் வாக்காளர்கள் உறுதிசெய்துவிட்டனர். எஞ்சியுள்ள 2 கட்ட தேர்தல்களில் போனஸ் வாக்குகளை அவர்கள் பாஜகவுக்கு அளிக்கவுள்ளனர்.
    காங்கிரஸ்-சமாஜவாதி கூட்டணியைப் பொருத்தவரை, ஒரு கட்சி, நாட்டை அழிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. மற்றொரு கட்சியோ, உத்தரப் பிரதேசத்தை அழிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. கடந்த 15 ஆண்டுகளில் மாமி (மாயாவதி), மருமகன் (அகிலேஷ் யாதவ்), தந்தை (முலாயம்) என்று பல்வேறு தலைவர்களை இந்த மாநிலம் பெற்றுள்ளது. அதனால், மாநில மக்களுக்கு நன்மை ஏதும் ஏற்பட்டதா?
    நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டுக்காக காங்கிரஸ் என்ன செய்தது என்பதை அந்தக் கட்சியால் பட்டியலிட முடியுமா?
    அனைவருக்கும் வீடு: உத்தரப் பிரதேசத்தில் 30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1.5 கோடிப் பேர் வீடின்றி உள்ளனர். வரும், 2022-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு வழங்கப்படும்.
    ’தேங்காய்ச் சாறு' ’உருளை தொழிற்சாலை': மணிப்பூரில் செவ்வாயன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ஒருவர் (ராகுல் காந்தி), தேங்காயில் சாறு பிழிந்து, அதை லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். அதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் என்ற முறையில் உத்தரப் பிரதேசத்தில் உருளைக் கிழங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என மத்திய அரசை தாம் வலியுறுத்துவதாகக் கூறினார். உண்மையில் தேங்காயில் தண்ணீர்தான் இருக்கும்; உருளைக் கிழங்கை தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய முடியாது.
    இத்தகு வித்தியாசமான தொலைநோக்கு சிந்தனையும், திறமையும் கொண்ட அந்தத் தலைவர் நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai