Enable Javscript for better performance
2ஜி வழக்கு: டாடா குழுமத்துக்கு எதிராக சுவாமி தொடுத்த வழக்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    2ஜி வழக்கு: டாடா குழுமத்துக்கு எதிராக சுவாமி தொடுத்த வழக்கு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 02nd March 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டாடா குழுமத்துக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
    முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு சுமார் ரூ. இரண்டரை லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்ட்டது.
    இது தொடர்பாக, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த 2ஜி முறைகேட்டில் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பதாகவும், எனவே இந்த வழக்கில் டாடா குழுமத்தையும் சேர்க்குமாறு கூறியும் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் மனு தாக்கல் செய்தார்.
    இந்த மனுவானது, நீதிபதி ஓ.பி. சைனி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியன் சுவாமி, ’டாடா குழுமத்துக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ அமைப்பே உறுதிப்படுத்தியுள்ளது; முன்னதாக, இந்த வழக்கில் டாடா குழுமத்துக்கு சாதகமாக சிபிஐ சமரசம் செய்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் டாடா குழுமத்தையும் சேர்க்க வேண்டும்' என்றார்.
    ஆனால், சுவாமியின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி சைனி, இந்த வழக்கில் டாடா குழுமத்துக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், மேலும் பல ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறும் கூறினார். இதையடுத்து, இந்த வழக்கின் மறு விசாரணையை மே 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai