Enable Javscript for better performance
அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பு 40%-ஆக உயர வாய்ப்பு: மசோதாவில் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பு 40%-ஆக உயர வாய்ப்பு: மசோதாவில் பரிந்துரை

    By DIN  |   Published on : 03rd March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் உருவாக்கியுள்ள வரைவு ஜிஎஸ்டி மசோதாவில், தற்போது 14 சதவீதமாக உள்ள உச்ச வரி விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    இதன்மூலம், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே, ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்காலத்தில 40 சதவீதம் வரை அரசு உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
    மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், பொருள்கள் மற்றும் சேவைகளின் தன்மை அடிப்படையில் 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி விதிக்க கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
    மேலும், உச்ச வரி விகிதமாக 14 சதவீதத்தை அந்தக் கவுன்சில் நிர்ணயித்தது. இதன்மூலம் அதிகபட்சமாக மத்திய, மாநில அரசுகள் தலா 14 சதவீதம் (மொத்தம் 28 சதவீதம்) ஜிஎஸ்டி வரி விதிக்க முடியும். இந்தச் சூழலில், உச்ச வரி விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்த தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் தனது வரைவு மசோதாவில் பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்க முடியும். தற்போது நிர்ணயிக்கப்பட்ட நான்கு அடுக்கு வரி விகிதங்கள், எதிர்காலத்தில் உயர்த்தப்படும் சூழல் ஏற்பட்டால், அதற்காக மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும்.
    அதனைத் தவிர்ப்பதற்காக, உச்ச வரி விகிதத்தை தற்போதே 20 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. எனினும், கடந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட 5, 12, 18, 28 சதவீதங்களிலேயே ஜிஎஸ்டி வரி விகிதம் தற்போது நிர்ணயம் செய்யப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai