சுடச்சுட

  

  ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கான புதிய சட்டப் பேரவைக் கட்டடத்தை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
  புதிய தலைநகர் அமராவதியின் வெலகபூடி பகுதியில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில் இந்தப் புதிய கட்டடத்தை முதல்வர் திறந்துவைத்தார்.
  மேலவைத் தலைவர் ஏ. சக்ரபாணி, பேரவைத் தலைவர் கோடெல சிவபிரசாத ராவ், பேரவைத் துணைத் தலைவர் மண்டலி புத்த பிரசாத் ஆகியோரும், ஏராளமான அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  இனி இந்தக் கட்டடத்தில்தான் ஆந்திர மாநில பேரவைக் கூட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
  வரும் மார்ச் மாதம் 6-ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இந்தக் கட்டடத்தில்தான் நடைபெறும்.
  இந்தப் புதிய கட்டத்தில் மேலவைக்கு 90 இருக்கைகளும், பேரவைக்கு 230 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஆந்திர சட்ட மேலவையில் 58 இடங்களும், பேரவையில் 176 இடங்களும் உள்ள நிலையில், எதிர்காலத்தில் கூடுதலாக இடங்கள் சேர்க்கப்பட்டால், அதற்கு வசதியாக கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் உறுப்பினர் இருக்கைக்கு முன்பும் ஒலிவாங்கி, ஒலிப்பெருக்கி, ஒலிப்பதிவுக் கருவி, வாக்களிக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  கால்களை நீட்டி அமருவதற்கு கூடுதல் இடவசதியுடன், சாயும் வசதி கொண்ட இருக்கைகள் இந்தப் புதிய பேரவைக் கட்டத்தில் நிறுவப்பட்டுள்ளன.
  பேரவைக் கூட்டங்களின்போது அமளிகள் ஏற்பட்டால், ஹைதராபாதில் உள்ள பழைய கட்டடத்தில் நடந்ததுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில், அவைத் தலைவரின் இருக்கை மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai