சுடச்சுட

  

  திருவனந்தபுரம்: ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது கையெறி குண்டு வீசப்பட்டதில், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்கள் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை கேரள முதல்வர் கொன்று வருகிறார். எனவே, ஒரு கொலைகார முதல்வரின் தலையைத் துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன். அந்தத் தொகையை எனது சொத்துகளை விற்றுக் கொடுப்பேன் என்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி குந்தன் சந்திராவத் பேசுவதாக வெளியாகியுள்ள அந்த விடியோ பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

  இதற்கு பதிலளித்து பேசிய பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ், முசோலினியிடம் இருந்து தங்களது அமைப்பின் கட்டமைப்பை மேற்கொண்டது. ஹிட்லரிடம் இருந்து சித்தாந்தத்தை பெற்றது என்று கூறினார்.

  இந்நிலையில் நடுப்புரம் அருகே உள்ள கலாச்சி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதில் காயமடைந்த மூன்று பேர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai