சுடச்சுட

  

  இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது: பிரணாப் பேச்சு

  By DIN  |   Published on : 03rd March 2017 12:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Pranabmu

  இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது என்று சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.
  ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கு சிறந்த சேவை ஆற்றும் வகையிலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும், போர்க்கால பயிற்சி பெறுவதிலும் சிறப்பாக விளங்கக்கூடிய படை பிரிவுகளுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம்.
  இந்த ஆண்டு சென்னை தாம்பரத்தில் உள்ள விமான படை தளத்துக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டவுள்ளது.
  இந்த விருது வழங்கும் விழாவில் இன்று காலை குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். அப்போது, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரணாப் முகர்ஜி.
  பின்னர், உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப், இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது. விமானப்படையின் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்கிறது. தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு, முன்னேற்றத்தில் வீரர்களின் பங்கு அளப்பறியது. பேரிடர் காலங்களில் விமானப்படை வீரர்களின் பணி சிறப்பாகவே இருந்து வருகிறது என பாராட்டிய பிரணாப், நாட்டிற்காக அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் வீரர்களை போற்றும் நிகழ்ச்சி இது. இந்திய ராணுவப்படைகள் எத்தகைய சூழலையும் சமாளிக்கக்கூடியவை என்று கூறினார்.
  முன்னதாக ‘125’ ரக ஹெலிகாப்டர் பிரிவு மற்றும் எம்.ஐ.டி. எனும் மெக்கானிக்கல் பயிற்சி மைய பிரிவுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
  இவ்விழாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
  அதன் பின்னர் அடையாரில் நடைபெறும் இந்திய பெண்கள் விழாவிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.
  இதன் பின்னர் மதியம் 1.15 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai