Enable Javscript for better performance
இழப்பீடு தருவதற்கு பதில் விவசாயிகளின் தற்கொலையை தடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    இழப்பீடு தருவதற்கு பதில் விவசாயிகளின் தற்கொலையை தடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 03rd March 2017 12:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SC


    புது தில்லி: விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகு இழப்பீடு வழங்குவதை விட தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

    விவசாயிகள் தற்கொலை மற்றும் விவசாய இழப்பீட்டை முறைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

    மேலும், விவசாயிகள்  தற்கொலையில் இழப்பீடு வழங்குவது மட்டும் தீர்வாகாது. விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

    இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க 12 திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்திருந்தது.

    இதையடுத்து மேல் நடவடிக்கை குறித்து 2 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai