சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (மார்ச் 4) நடைபெறவுள்ளது.
  இதனை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
  இந்தத் தேர்தலில் ஆளும் சமாஜவாதியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. பாஜக இரண்டு சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
  மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில், ஆறாவது கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.
  மொத்தம் 49 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 635 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1 கோடியே 72 லட்சம் பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 94.60 லட்சம் பேர் ஆண்கள், 77.84 லட்சம் பேர் பெண்கள். ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில், சமாஜவாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மக்களவைத் தொகுதியான ஆஸம்கர் மாவட்டமும் உள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai