சுடச்சுட

  

  உ.பி. தேர்தல் பிரசாரம்: 2 பொதுக் கூட்டங்களில் மட்டுமே பேசிய முலாயம் சிங்!

  By DIN  |   Published on : 03rd March 2017 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமாஜவாதி கட்சியின் நிறுவனரும், அந்த மாநில முதல்வர் அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங், உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி இதுவரை 2 பொதுக் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று பிரசாரம் செய்துள்ளார்.
  கடந்த 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது சுமார் 300-க்கும் மேற்பட்ட பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்று முலாயம் சிங் வாக்கு சேகரித்திருக்கிறார்.
  ஆனால், அகிலேஷுடனான கருத்து வேறுபாடு, உடல் நலக் குறைபாடு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி சமாஜவாதி சார்பில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டங்களில் இதுவரை இரண்டில் மட்டுமே பங்கேற்று முலாயம் சிங் பிரசாரம் செய்திருக்கிறார். அதுவும், தனது மருமகள் அபர்ணா யாதவ், சகோதரர் சிவபால் சிங் யாதவ் ஆகிய இருவருக்கு மட்டுமே ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார்.
  கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 18 பொதுக் கூட்டங்களில் மட்டுமே முலாயம் சிங் யாதவ் பங்கேற்று பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai