சுடச்சுட

  

  உள்நாட்டு சுற்றுலாவில் 3வது ஆண்டாக தமிழகம் தொடர்ந்து முதலிடம்

  By DIN  |   Published on : 03rd March 2017 11:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rameswaram_bridge


  சென்னை: உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலமாக தமிழகம் 3வது முறையாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

  கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் தமிழகத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து 34 கோடியே 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

  அதே சமயம், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 3% அதிகரித்துள்ளது.

  இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் விளங்குகிறது.

  தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கோயில்கள் ஏராளமாக இருப்பது முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரம் தமிழகத்தில் மிகச் சிறந்த மருத்துவமனை வசதிகள் இருப்பதும், டிராவல் ஏஜெண்டுகளும், மாநில சுற்றுலாத் துறையும் மிகச் சிறந்த சேவையை செய்வதும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

  மேலும், வாராணசி வரும் மக்கள், அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் வருகிறார்கள். தமிழகத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ராமேஸ்வரம் விளங்குகிறது. அதற்கடுத்த இடத்தில் திருச்சி மற்றும் மதுரை இடம்பெற்றுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai