சுடச்சுட

  

  கப்பல் தகர்ப்பு ஏவுகணை: நீர்மூழ்கியிலிருந்து ஏவி வெற்றிகரமாக சோதனை

  By DIN  |   Published on : 03rd March 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  submarinemissiles

  எதிரி நாட்டு கப்பலை தகர்த்து அழிக்கும் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தி இந்தியக் கடற்படை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது.
  இதன்மூலம், கடற்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியானது கடற்படைக்கு அடுத்தகட்ட பாய்ச்சல் ஆகும்.
  இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  ஸ்கார்பியன் வகையைச் சேர்ந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முதலாவதாக தயாரிக்கப்பட்டுள்ள கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து எதிரி நாட்டு கப்பலை துல்லியமாகத் தாக்கி தகர்க்கும் ஏவுகணை பொருத்தப்பட்டு வியாழக்கிழமை சோதனை செய்யப்பட்டது.
  அரபிக் கடலில் இருந்து தரைதளத்தில் மிக தொலைதூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி தகர்த்தது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை பிரெஞ்சு கடற்படை மற்றும் ஆற்றல் நிறுவனம் வடிவமைத்தது.
  மும்பையில் மஸாகான் டாக் லிமிடெட் நிறுவனம் அந்தக் கப்பல்களை தயாரித்து வருகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai