சுடச்சுட

  

  கேரள முதல்வரின் தலையை துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம்: ஆர்எஸ்எஸ் நிர்வாகி!

  By DIN  |   Published on : 03rd March 2017 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranaivijayan

  கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று கூறியதால் மத்தியப் பிரதேச ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் வியாழக்கிழமை சர்ச்சையில் சிக்கினார்.
  மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி குந்தன் சந்திராவத் பேசுவதாக வெளியாகியுள்ள அந்த விடியோ பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. அந்த விடியோவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை கேரள முதல்வர் கொன்று வருகிறார். எனவே, ஒரு கொலைகார முதல்வரின் தலையைத் துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன். அந்தத் தொகையை எனது சொத்துகளை விற்றுக் கொடுப்பேன் என்று குந்தன் கூறியுள்ளார்.
  ஆர்எஸ்எஸ் கண்டனம்: ஆனால், அவரது கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன், அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ளது.
  இதுதொடர்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கியப் பிரமுகர் நந்தகுமார் கூறியதாவது: வன்முறை மீது ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு நம்பிக்கையில்லை. ஆனால், கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக, ஜனநாயக வழியில், அமைதியான முறையில் எங்களது போராட்டம் தொடரும் என்றார் அவர்.
  யெச்சூரி கருத்து: இதனிடையே, குந்தன் சந்திராவத்தின் கருத்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான முகம், பயங்கரவாதம் என்பதைக் காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறினார். அவர் மேலும் கூறுகையில், ’’குந்தன் சந்திராவத்தின் கருத்துக்குப் பிறகு பிரதமரும், பாஜக தலைமையிலான மத்திய அரசும் மெளனம் காப்பது ஏன்? அந்த மெளனம், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு துணிச்சலைக் கொடுக்கும் வகையில் உள்ளது'' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai